/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா துவக்கம் பிப்.24 ல் பகல், இரவு தெப்பம்
/
திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா துவக்கம் பிப்.24 ல் பகல், இரவு தெப்பம்
திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா துவக்கம் பிப்.24 ல் பகல், இரவு தெப்பம்
திருக்கோஷ்டியூர் தெப்ப திருவிழா துவக்கம் பிப்.24 ல் பகல், இரவு தெப்பம்
ADDED : பிப் 16, 2024 05:22 AM

திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் மாசித் தெப்ப திருவிழா துவங்கியது. பிப்.24ல் காலை மற்றும் இரவில் தெப்பம் நடைபெறும்.
இக்கோயிலில் தெப்ப உத்ஸவத்தை முன்னிட்டு நேற்று காலை 8:10 மணி அளவில் மூலஸ்தானத்திலிருந்து பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் கல்யாண மண்டபத்தில் கொடி மரம் அருகே எழுந்தருளினர்.
தொடர்ந்து கொடிப்படம், சக்கரத்தாழ்வார் திருவீதி வலம் வந்து பலிபீடங்களுக்கு காப்புக்கட்டப்பட்டது.
பின்னர் கொடிமரத்திற்கு பூஜை நடந்து காலை 10:30 மணிக்கு பட்டாச்சார்யர்களால் கொடியேற்றம் நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு அபிேஷக, தீப, கற்பூரஆராதனை நடந்தன.
மாலையில் சுவாமிக்கு காப்புக் கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து இரவில் தங்கப்பல்லக்கில் பெருமாள் பூதேவி ஸ்ரீதேவியருடன் திருவீதி புறப்பாடு நடந்தது. இன்று முதல் தினசரி காலை 9:00 மணிக்கு சுவாமி புறப்பாடும், இரவில் சிம்மம், ஹனுமன், கருடன்,சேஷன், குதிரை, வாகனங்களில் சுவாமி திருவீதி புறப்பாடும் நடைபெறும்.
பிப்.23ல் வெண்ணெய்த்தாழி சேவையும், பிப்.24 ல் பகல் மற்றும் இரவு பெருமாள் தெப்பம் கண்டருளல் நடைபெறும்.
பிப்.25 ல் தீர்த்தவாரியுடன் உத்ஸவம் நிறைவடையும். ஏற்பாட்டினை சிவகங்கை சமஸ்தானக் கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் செய்கிறார்.