/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்தில் தங்கத்தகடு ஒட்டும் திருப்பணி துவக்கம்
/
திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்தில் தங்கத்தகடு ஒட்டும் திருப்பணி துவக்கம்
திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்தில் தங்கத்தகடு ஒட்டும் திருப்பணி துவக்கம்
திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்தில் தங்கத்தகடு ஒட்டும் திருப்பணி துவக்கம்
ADDED : நவ 15, 2024 02:23 AM

திருக்கோஷ்டியூர்:சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த திருக்கோஷ்டியூர் கோவில், மூன்று சொற்களை உணர்த்தும் விதமாக, மூன்று தளங்களாக உள்ளது.
இங்கு, மூலவர் விமானத்திற்கு தங்கத்தகடு பதிக்கும் திருப்பணியை, தேவஸ்தானம் மற்றும் சவுமிய நாராயணன் எம்பெருமானார் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியவை, 18 ஆண்டுகளுக்கு முன் துவக்கின. விமானத்தின் சுதை வேலைப்பாடுகளில் தாமிரத்தகடு பொருத்தும் பணி முடிந்து விட்டது.
திருப்பணி விமானத்தின் முதல்நிலை, மத்திம நிலை, அடித்தட்டு பிரிக்கப்பட்டது. விமான திருப்பணிக்கு, 77 கிலோ தங்கம் தேவைப்பட்டது.
தற்போது உபயதாரர்கள் மூலம் சேர்ந்துள்ள 29 கிலோ 813 கிராம் தங்கத்தை வைத்து, முதல் நிலை திருப்பணி துவக்கப்பட்டுள்ளது.
சக்கரத்தாழ்வார் சன்னிதியில், தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் முன்னிலையில், நேற்று காலை 9:40 மணிக்கு தங்கம் நீள் தகடாக மாற்றப்பட்டது.
காலை 10:08 மணிக்கு பட்டாச்சார்யர்கள் பாசுரம் பாட, விமான உச்சிக்கான கவசத்தில் தங்கத் தகடை ஒட்டி, திருப்பணியை துவக்கி வைத்தார்.
தொடர்ந்து உபயதாரர்கள், பக்தர்கள் பலரும் தகடை ஒட்டினர். பின், மூலவர் தரிசனம் நடந்தது. அதுபோல, அமைச்சர் பெரியகருப்பனும் செய்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் புவனேஸ்வரி, டிரஸ்ட் தலைவர் காந்தி தொண்டமான், கண்டரமாணிக்கம் மணிகண்டன், நாலு வட்டகை யாதவர் சங்க தலைவர் ராஜ்மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.