/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புகை மூட்டத்தால் மூச்சு திணறல் அலட்சியத்தில் திருப்புவனம் பேரூராட்சி
/
புகை மூட்டத்தால் மூச்சு திணறல் அலட்சியத்தில் திருப்புவனம் பேரூராட்சி
புகை மூட்டத்தால் மூச்சு திணறல் அலட்சியத்தில் திருப்புவனம் பேரூராட்சி
புகை மூட்டத்தால் மூச்சு திணறல் அலட்சியத்தில் திருப்புவனம் பேரூராட்சி
ADDED : ஆக 23, 2025 05:24 AM

திருப்புவனம், : திருப்புவனம் நகரை சுற்றிலும் பேரூராட்சி நிர்வாகம் தினசரி குப்பை கொட்டி தொடர்ந்து தீ வைப்பதால் பொதுமக்கள் பலரும் புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திருப்புவனம் நகரில் 18 வார்டுகளிலும் தினசரி ஆறு டன் முதல் பத்து டன் வரை குப்பை சேகரிக்கப்படுகின்றன. திருப்புவனம் நெல்முடிகரை மயானம் அருகில் உள்ள குப்பை கிடங்கில் குப்பை தரம்பிரித்து அழிக்கப்படும். பல ஆண்டுகளாக குப்பை தரம்பிரிக்காமல் அப்படியே குவித்து வைக்க தொடங்கியதால் குப்பை சேர்ந்து விட்டன. குப்பைகளை கொட்ட ஏனாதி அருகே தேளி கிராமத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டும் கொண்டு செல்ல முடியவில்லை.
எனவே பேரூராட்சி ஊழியர்கள் குப்பைகளை வைகை ஆற்றில் கொட்டி தீ வைத்து அழிக்க தொடங்கினர். வைகை ஆற்றில் தடுப்பணை உள்ளிட்டவை கட்டப்பட்டதால் அங்கும் கொட்ட முடியவில்லை.
இதனால் நான்கு வழிச்சாலை பைபாஸ் ரோடு அருகே தினசரி குப்பை கொட்டி தீ வைத்து வருகின்றனர்.
காலை ௬:௦௦ மணி முதலே வெயிலின் தாக்கம் உள்ள நிலையில் தீ வைப்பதால் பைபாஸ் ரோட்டில் வாகனங்களில் செல்லவே முடியவில்லை. புகை மூட்டத்தால் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு வருகிறது.
சேகர் கூறுகையில் : நேற்று முன் தினம் காலை ௯:௦௦ மணிக்கு மதுரைக்கு டூவீலரில் வேலைக்கு சென்ற இளைஞர் புகை மூட்டத்தால் மயங்கி விழுந்து விட்டார்.ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் பிழைத்தார், அருகில் இருந்தவர்கள் தண்ணீர் தெளித்து காப்பாற்றினர். அடர்த்தியான புகை மூட்டத்தால் சாலையும் தெரியவில்லை. எதிரில் வரும் வாகனங்களும் தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் குப்பை எரிப்பதை தடுக்க வேண்டும், என்றார்.
பேரூராட்சி நிர்வாகம் குப்பை தரம்பிரிக்கும் மையத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் ஓரளவிற்கு குப்பை அப்புறப்படுத்தலாம்.