ADDED : பிப் 05, 2024 11:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்டவராயன்பட்டி : திருப்புத்துார் ஒன்றியம் கண்டவராயன்பட்டி நகர சிவன் கோயிலில் நுாறாவது திருவாசக முற்றோதல் திருவிழா நடந்தது.
காலையில் விநாயகர் முருகன் சுவாமி அம்பாள் மற்றும் நால்வருக்கு அபிஷேக,ஆராதனை நடந்தன. பின்னர் 108 சிவலிங்கம் வைத்து தீபம் ஏற்றி சுவாமி,அம்பாள் ஊஞ்சலில் எழுந்தருளி முற்றோதல் துவங்கியது. மாலையில் ஒருங்கிணைப்பாளர் .அழ. சி .தியாகராசன் தலைமையில் நிதி உதவியவர்கள், முற்றோதலில் பங்கேற்றவர்கள் கெளரவிக்கப்பட்டனர். இரவு 7:00 மணிக்கு விநாயகர், பிரதோஷ சுவாமி,சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. கண. ஆறுமுகம், கா.சி. சுப்பிரமணியன், கா. அண்ணாமலை, மெ பழனியப்பன் ஒருங்கிணைத்தனர்.