தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்

தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்

தொ.மு.ச., ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 21, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 04:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை,செப்.22-

சிவகங்கை அரண்மனைவாசலில் தி.மு.க., சார்பு அணியான தொ.மு.ச., சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட தொ.மு.ச., கவுன்சில் பேரவை தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தொ.மு.ச., செயலாளர் திருநாவுக்கரசு வரவேற்றார். பொருளாளர் வடிவேல் முன்னிலை வகித்தார். மாநில போக்குவரத்து அமைப்பு செயலாளர் தர்மன் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பேசினார். விலைவாசி உயர்வினை கட்டுபடுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதை நிறுத்த வேண்டும். மின்சார திருத்த சட்டம் 2025 திரும்பபெறவேண்டும். துாத்துக்குடியில் தனியார் அனல் மின் நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும். தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு கனிம நிறுவன தொ.மு.ச., செயலாளர் குமார், நாகராஜன், சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us