UPDATED : அக் 15, 2026 04:42 PM
ADDED : அக் 15, 2026 04:39 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சிவகங்கையில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு அக்., 21 முதல் துவங்குகிறது. தற்போது டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 ல் 46 பதவிக்கென காலியாக உள்ள 6,574 பணியிடங்களுக்கு தேர்வு செய்வதற்காக அறிவிப்பு செய்துள்ளனர். இப்பயிற்சி வகுப்பில் வாரம் தோறும் மாதிரி தேர்வு நடத்தப்படும். மேலும் விபரத்திற்கு 04575 240 435 ல் தொடர்பு கொள்ளலாம் என்றார். ///
