ADDED : செப் 21, 2026 04:42 PM
திருப்புத்துார்,செப்.22-
திருமயம் -மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை எண்:226 இருவழிச்சாலையில் திருப்புத்துார் அருகே செண்பகம்பேட்டை சுங்க சாவடி வழியாக செல்லும் வாகனங்களுக்கு திருத்தியமைக்கப்பட்ட கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய காரைக்குடி திட்ட இயக்குநர் அறிவித்துள்ளதாவது:
கார்,ஜீப்,வேன், இலகுரக வாகனங்களுக்கு ஒரு முறை பயணிக்க ரூ 80, 24 மணி நேரத்திற்குள் சென்று, திரும்ப ரூ 125, மாத பாஸ் கட்டணம் ரூ2,725, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு எண் பெற்ற வாகனங்களுக்கு ரூ 40 கட்டணம் செலுத்த வேண்டும்.
இலகுரக வணிக வாகனம்,சரக்கு வாகனம்,மினிபஸ் வாகனங்களுக்கு ஒரு முறை பயணிக்க ரூ 130, 24 மணி நேரத்திற்குள் சென்று,திரும்ப ரூ 200, மாதாந்திர பாஸ் ரூ 4,400, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்த வாகனங்களுக்கு ரூ 65 செலுத்த வேண்டும்.
பஸ் மற்றும் 2 அச்சு கொண்ட ட்ரக்குகளுக்கு ஒரு முறை பயணிக்க ரூ 275, 24 மணி நேரத்திற்குள் சென்று,திரும்ப ரூ 415, மாதாந்திர பாஸ் ரூ 9215, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்த பஸ்,ட்ரக்குகளுக்கு ரூ 140 செலுத்த வேண்டும்.
மூன்று அச்சுள்ள வணிக வாகனங்களுக்கு ஒரு முறை பயணிக்க ரூ 300, 24 மணி நேரத்திற்குள் சென்று,திரும்ப ரூ 450, மாதாந்திர பாஸ் ரூ 10,055, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ரூ 150 செலுத்த வேண்டும்.
கனரக கட்டுமான வாகனம்,ஜேசிபி, 4 முதல் 6 அச்சுள்ள வாகனங்களுக்கு ஒரு முறை பயணிக்க ரூ 435 ,24 மணி நேரத்திற்குள் சென்று,திரும்ப ரூ 650, மாதாந்திர பாஸ் ரூ 14,455, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்த கனரக வாகனங்களுக்கு ரூ 215ம் செலுத்த வேண்டும்.
ஏழு, ஏழுக்கும் அதிகமான அச்சுள்ள மிக அதிக அளவுள்ள வாகனங்களுக்கு ஒரு முறை பயணிக்க ரூ 530, 24 மணி நேரத்திற்குள் சென்று,திரும்ப ரூ 790, மாதாந்திர பாஸ் ரூ 17,595, சிவகங்கை மாவட்டத்தில் பதிவு செய்த வாகனங்களுக்கு ரூ 265ம் செலுத்த வேண்டும். வணிகம் அல்லாத சொந்த வாகன உபயோகத்திற்கான மாத பஸ் கட்டணம் ரூ 360ஐ சுங்கச்சாவடியில் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். புதிய கட்டணம் செப்.,20 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
