/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் தக்காளி விலை சரிவு
/
மானாமதுரையில் தக்காளி விலை சரிவு
ADDED : ஜன 02, 2025 11:52 PM
மானாமதுரை; மானாமதுரை வாரச்சந்தையில் தக்காளி விலை சரிந்து 5 கிலோ ரூ.100, சின்ன வெங்காயம் விலை உயர்ந்து ஒரு கிலோ ரூ.80க்கு விற்பனையானது.
மானாமதுரை வாரச்சந்தையில் மதுரை, திருப்புவனம்,திருப்பாச்சேத்தி, இளையான்குடி, சிவகங்கை,பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து 300க்கும் மேற்பட்ட வியாபாரிகள் வந்து  பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற சந்தையில் கடந்த சில வாரங்களாக விலை கூடுதலாக விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி விலை குறைந்து இந்த வாரம் 5 கிலோ ரூ.100க்கும்,விலை குறைவாக இருந்த சின்ன வெங்காயம் விலை உயர்ந்து ரூ.80க்கும், பெரிய வெங்காயம் ரூ.50, கத்தரிக்காய் ரூ.100, கேரட், முள்ளங்கி,சவ்சவ் ரூ.80, பச்சை மிளகாய் ரூ. 80, பட்டர் பீன்ஸ்,சோயா பீன்ஸ் ரூ.160, சின்னப்பாகற்காய் ரூ.220, உருளைக்கிழங்கு ரூ.60 என விற்பனையானது.

