/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காரைக்குடி சிக்ரியில் நாளை பார்வையாளர்கள் தினம்
/
காரைக்குடி சிக்ரியில் நாளை பார்வையாளர்கள் தினம்
ADDED : செப் 25, 2024 05:12 AM
சிவகங்கை : காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) நாளை (செப்., 26) பார்வையாளர் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகள் மாணவர்கள், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.
இங்கு, அரிமானம், மின்கலன்கள் (பேட்டரி), மின்வேதியியல் பொறியியல், முப்பரிமான, மின் கரிம வேதியியல் உட்பட ஏராளமான துறைகள் மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் செப்., 26 அன்று காரைக்குடி சிக்ரியில் பார்வையாளர் தினம் கடைபிடிக்கப்படும். அன்றைய தினம் சிக்ரி விஞ்ஞானிகள் கண்டறிந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களின் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்படும்.
பார்வையாளர் நேரம் காலை 10:00 முதல் மாலை 4:30 மணி வரை. அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்களுக்கு அனுமதி இலவசம். வெளியூரில் இருந்து காரைக்குடி சிக்ரி வரும் மாணவர், மக்களுக்காக காரைக்குடி பழைய, புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து சிக்ரிக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு டவுன் பஸ்கள் இயக்கப்படும். இங்கு மாணவர்களுக்காக நடக்கும் அறிவியல் வினாடி வினா போட்டியில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். ஏற்பாடுகளை சிக்ரி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.