/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டி வைத்து சித்ரவதை; மகள் மீது தந்தை புகார்
/
கட்டி வைத்து சித்ரவதை; மகள் மீது தந்தை புகார்
ADDED : பிப் 23, 2024 05:06 AM
காரைக்குடி : காரைக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவரை பெற்ற மகளே சொத்துக்காக தன்னை சங்கிலியால் கட்டி சித்ரவதை செய்ததாக தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.
காரைக்குடி பெரியார் நகர் ஐந்தாம் வீதியைச் சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் 74.
எலக்ட்ரிக்கல் கான்ட்ராக்டர் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி கல்யாணி சத்துணவு அமைப்பாளராக இருந்துள்ளர். இவரது ஒரே மகள் அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
சவுந்தரராஜன் மனைவி கல்யாணி உயிரிழந்த நிலையில் அவர் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது மகள் ராஜி,சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக கேட்டு வாங்கியுள்ளனர்.
இந்நிலையில் சவுந்தர்ராஜனை, மகள் ராஜி மற்றும் அவரது கணவரும் உறவினர்களும் காரில் கடத்திச் சென்று பள்ளத்துாரில் உள்ள அவர்களது வீட்டில் சங்கிலியால் கட்டிப்போட்டு சித்ரவதை செய்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
சவுந்தரராஜன் கூறுகையில்: கடந்த டிச.12ம் தேதி வீட்டில் துாங்கி கொண்டிருந்த போது, எனது மகள் ராஜி அவரது கணவர் மற்றும் உறவினர்கள் என்னை கட்டி வண்டியில் துாக்கிச் சென்று விட்டனர்.
பள்ளத்துாரில் உள்ள ஒரு வீட்டில் சங்கிலியால் கட்டி வைத்தனர். சங்கிலியால் கட்டப்பட்டதால் கை புண்ணாகியது.
நான் போர்வையை கிழித்து கயறு போல செய்து மாடியில் இருந்து இறங்கி தப்பி நண்பரின் வீட்டிற்கு வந்தேன். வீட்டிற்கு வந்து பார்த்தபோது ஒரு பொருள் கூட இல்லை. இதுகுறித்து போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்.
ஏ.எஸ்.பி ஸ்டாலின் கூறுகையில்: சவுந்தரராஜன் தனது மகள் சங்கிலியால் கட்டி வைத்து சித்ரவதை செய்ததாக புகார் வந்துள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.