தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கிடப்பில் போடப்படும் வளர்ச்சிப்பணிகள் சுற்றுலா துறை அலட்சியம்

 கிடப்பில் போடப்படும் வளர்ச்சிப்பணிகள் சுற்றுலா துறை அலட்சியம்

 கிடப்பில் போடப்படும் வளர்ச்சிப்பணிகள் சுற்றுலா துறை அலட்சியம்


ADDED : டிச 15, 2025 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2025 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுலா துறை மூலம் செயல்படுத்தப்படும் பணியில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி, மடப்புரம், இடைக்காட்டூர், செட்டிநாடு, உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா துறை சார்பாக வளர்ச்சி திட்ட பணிகள் செயல்படுத்தப்படுவதாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் எந்த திட்டமும் முறையாக செயல்படுத்தப் படுவதில்லை.

கீழடி அருங்காட்சியகம் கடந்த 2023, மார்ச்சில் தொடங்கப்பட்டது. தினசரி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். அருங்காட்சியகத்தின் எதிரே உள்ள காலி இடத்தில் வாகன காப்பாகம் அமைத்து வாகன ஓட்டுனர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என சுற்றுலா துறை சார்பில் அறிவிக்கப்பட்டு அப்போதைய கலெக்டர் ஆஷா அஜித் இடங்களையும் நேரில் பார்வையிட்டார். ஆனால் இன்று வரை எந்த பணிகளும் நடைபெறவில்லை.

தினசரி 50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் கீழடி அருங்காட்சியகத்திற்கு வந்து செல்கின்றன.

வாகன ஓட்டுனர்கள் இயற்கை உபாதை உள்ளிட்டவற்றிற்காக கண்மாயை ஒட்டி மறைவிடம் தேடி செல்ல வேண்டியுள்ளது. பலமுறை அறிவிக்கப்பட்ட வாகன காப்பக பணிகளை தொடங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இரண்டு ஆண்டுகள் கடந்தும் எந்த வித நடவடிக்கையும் இல்லை.

அதே போல மடப்புரத்திலும் சுற்றுலா துறை சார்பில் சோலார் மின் விளக்கு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

தொடங்கியதில் இருந்து இன்று வரை சோலார் விளக்கு எரியவே இல்லை. மாவட்ட நிர்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

வரும் காலங்களிலாவது சுற்றுலாத்துறை அதிகாரிகள் அறிவிக்கப்பட்ட திட்டங்களை முறையாக செயல்படுத்தி தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us