/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வைரவன்பட்டியில் சுற்றுலா பொங்கல் விழா
/
வைரவன்பட்டியில் சுற்றுலா பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 12:21 AM

திருப்புத்தூர், திருப்புத்தூர் அருகே நகர வைரவன்பட்டியில் வளரொளிநாதர், வயிரவசுவாமி கோயில் வளாகத்தில் சுற்றுலா பொங்கல் விழா நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர் வரவேற்றார். விழாவில் அமெரிக்கா, ஜெர்மன், பிரான்ஸ், டென்மார்க், பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்த 27 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்களை சுற்றுலாத்துறையினர் கவுரவித்தனர். உள்ளூர் மக்களுக்கு வெளிநாட்டினர் தமிழில் 'பொங்கலோ, பொங்கல்' என்று கூறி வாழ்த்து தெரிவித்தனர்.
பொங்கல் பால் பொங்கியபின் உருமி, கரகாட்டம், கும்மியாட்டம், கோலாட்டம், மேளதாளம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கரகாட்டம் பார்த்த வெளிநாட்டினர் அவர்களும் தலையில் கரகம் வைத்து ஆட முயன்றனர்.
மாட்டு வண்டியில் வெளிநாட்டினர் கோயிலை வலம் வந்தனர். சிலம்பம், வாள் சுற்றி மாணவர்கள் சாகசம் செய்தனர். மாணவியின் பரதநாட்டிய நடனம் நடந்தது. உற்சாகத்துடன் கிராமத்தினர் பொங்கல் விழாவில் பங்கேற்றனர்.