/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் துவக்கம்
/
புதிய வழித்தடத்தில் டவுன் பஸ் துவக்கம்
ADDED : நவ 24, 2025 09:24 AM
கீழடி: கீழடி அருகே புலியூரில் இருந்து மதுரை மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பேருந்து நிலையத்திற்கு புதிய டவுன் பஸ்சை அமைச்சர் சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
புலியூர், சயனாபுரம், பொட்டப்பாளையம், பனையூர், உள்ளிட்ட கிராமமக்கள் தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை, திருச்சி, திண்டுக்கல் செல்ல மூன்று பஸ் மாறி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் செல்ல வேண்டும். புலியூரில் இருந்து நேரடியாக பஸ் இருந்தால் சுற்றுவட்டார ஐந்து கிராமமக்களுக்கும் வசதியாக இருக்கும் என பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர். நேற்று புலியூரில் இருந்து பனையூர், சிந்தாமணி வழியாக மாட்டுத்தாவணிக்கு புதிய தாழ்தள டவுன் பஸ் துவக்கி வைக்கப்பட்டது. திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், புலியூர் முன்னாள் ஊராட்சி தலைவர் ரவி பங்கேற்றனர்.

