தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அரிசி, பருப்பு இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு

அரிசி, பருப்பு இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு

அரிசி, பருப்பு இருப்பு வைக்க வியாபாரிகளுக்கு கட்டுப்பாடு


UPDATED : நவ 25, 2026 03:56 PM

ADDED : நவ 25, 2026 03:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 03:56 PM ADDED : நவ 25, 2026 03:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: அரிசி, பருப்புகளை இருப்பு வைப்பதற்கு ஆலை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசு விதித்துள்ள நிபந்தனைகள்: நெல், அரிசி மொத்த விற்பனையாளர்கள் அதிகபட்சம் 2 ஆயிரம் டன், சில்லறை விற்பனையாளர்கள் அதிகபட்சம் 8 டன் மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும். பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்கள் ஒவ்வொரு விற்பனை நிலையத்திலும் அதிகபட்சம் 8 டன் மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆலை உரிமையாளர்கள் ஒரு மாதத்திற்கான ஆலையின் உற்பத்தி திறனுக்கும் மேலாக நெல், அரிசியை இருப்பு வைத்திருக்க கூடாது. நெல், அரிசி இறக்குமதி செய்பவர்கள் சுங்க அனுமதி (கஸ்டம் கிளியரன்ஸ்) பெற்ற நாளில் இருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்த பொருட்களை பாதுகாத்து வைத்திருக்க கூடாது. அதே நேரம் அரிசி ஆலைகளில் நெல்லை பதப்படுத்துபவர்கள் 2027 ஜன. வரை மீதமுள்ள மாதங்களின் எண்ணிக்கையால் பெருக்கப்பட்ட மாத உற்பத்தி திறனில் 60 சதவீதம் மட்டுமே இருப்பு வைக்க வேண்டும். நெல், அரிசி இருப்பு விபரங்களை கண்டிப்பாக நுகர்வோர் விவகாரத்துறையின் இணையதளத்தில் (fcainfofb.nic.in/psp) பதிவு செய்ய வேண்டும். இது போன்று இருப்பு வரம்பை விட அதிகளவில் வைத்திருப்போர் நவ., 26க்குள் உரிய வரம்பிற்குள் குறைத்து கொள்ள வேண்டும். நெல், அரிசி இருப்பு விபரத்தை இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

* துவரம் பருப்பு, உளுந்து விபரம்:



மொத்த விற்பனையாளர்கள் ஒவ்வொரு வகை பருப்பையும் அதிகபட்சம் 200 டன் வரை இருப்பு வைக்கலாம். சில்லறை விற்பனையாளர் மற்றும் பெரிய சில்லறை விற்பனையாளர்கள் அதிகபட்சம் 5 டன் வரை மட்டுமே இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு கிடங்கிலும் ஒவ்வொரு வகை பருப்பும் அதிகட்சம் 200 டன் வரை இருப்பு வைக்கலாம். அதே போன்று துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆலைகள் கடந்த 3 மாதங்களின் உற்பத்தி அளவு அல்லது ஆண்டுக்கான நிறுவப்பட்ட உற்பத்தி திறனில் 25 சதவீதம், இதில் எது அதிகமோ அந்தளவிற்கு இருப்பு வைக்கலாம். இறக்குமதியாளர்கள் சுங்க அனுமதி (கஸ்டம்ஸ் கிளியரன்ஸ்) கிடைத்த நாளில் இருந்து 45 நாட்களுக்கு மேல் இறக்குமதி செய்த பருப்புகளை இருப்பு வைக்க கூடாது.

* கலெக்டர்கள் மூலம் அறிவுறுத்தல்:



உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் அரிசி, பருப்பு விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு இந்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இது குறித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மூலம் அரிசி ஆலை உரிமையாளர், மொத்த, சில்லறை விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம். இது குறித்த முழுவிபரமும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us