/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிராமங்களுக்கே சென்ற வியாபாரிகள் சந்தைக்கு வந்த குறைந்தளவு ஆடுகள்
/
கிராமங்களுக்கே சென்ற வியாபாரிகள் சந்தைக்கு வந்த குறைந்தளவு ஆடுகள்
கிராமங்களுக்கே சென்ற வியாபாரிகள் சந்தைக்கு வந்த குறைந்தளவு ஆடுகள்
கிராமங்களுக்கே சென்ற வியாபாரிகள் சந்தைக்கு வந்த குறைந்தளவு ஆடுகள்
ADDED : ஜூலை 16, 2025 01:20 AM
திருப்புவனம் : திருப்புவனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கே நேரடியாக சென்று ஆடுகளை வாங்குவதால் நேற்று சந்தைக்கு குறைந்த அளவே ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
திருப்புவனம் வட்டாரத்தில் மணல்மேடு, பெத்தானேந்தல், அல்லிநகரம், பழையனூர், கொந்தகை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் அதிகளவில் வளர்க்கப்படுகின்றன. விவசாயம் தவிர்த்து கால்நடை வளர்ப்பு தான் அதிகளவு விவசாயிகளுக்கு கை கொடுத்து வருகிறது. திருப்புவனம் வட்டாரத்தில் கடந்தாண்டு வரை 20 ஆயிரத்து 615 செம்மறியாடுகளும், 21 ஆயிரத்து 370 வெள்ளாடுகளும் இருந்தன.
இறைச்சிக்காக பெரும்பாலும் வெள்ளாடுகளையே விரும்பி வாங்குவார்கள், திருப்புவனத்தில் வாரம்தோறும் செவ்வாய்கிழமை காலை ஒன்பது மணி வரை கால்நடை சந்தை நடைபெறும், சுற்று வட்டார கிராம விவசாயிகள் ஆடு, கோழி உள்ளிட்டவற்றை விற்பனை செய்து தேவையானவற்றை வாங்கிச் செல்வார்கள், திருப்புவனம் சந்தைக்கு தேனி, கேரளா, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவில் வியாபாரிகள் வந்து ஆடு, கோழி வாங்கிச் செல்வது வழக்கம்.
சமீப காலமாக வியாபாரிகள் நேரடியாக கிராமங்களுக்கே சென்று ஆடு, கோழி வாங்கிச் செல்கின்றனர். இதனால் சந்தைக்கு விற்பனைக்கு அதிகளவில் ஆடு, கோழி வருவதில்லை. சராசரியாக சந்தையில் 500 ஆடுகள் வரை விற்பனையாகும், ஆடி, தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட நாட்களில் இரண்டாயிரம் ஆடுகள் வரை விற்பனையாகும், ஆனால் நாளை 17ம் தேதி ஆடி பிறக்க உள்ள நிலையில் குறைந்த அளவே ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
கால்நடை வளர்ப்பவர்கள் கூறுகையில்: கிராமத்தில் இருந்து ஆடு, கோழி கொண்டு வந்து விற்பனை செய்வது சிரமம், நேரடியாக வந்து வாங்கிச் செல்வதால் எங்களுக்கும் அலைச்சல் மிச்சம், எனவே தேடி வருபவர்களிடம் விற்பனை செய்கிறோம், என்றனர்.