/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தரைப்பாலம் பெயர்ந்ததால் போக்குவரத்தில் சிக்கல்
/
தரைப்பாலம் பெயர்ந்ததால் போக்குவரத்தில் சிக்கல்
ADDED : டிச 11, 2025 05:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டை ஒத்தக்கடையில் கைலாச விநாயகர் கோயில் உள்ளது. காந்தி ரோடு பகுதியில் இருந்து நகர் நல மையத்தை ஒட்டி கோயிலுக்கு வரும் ரோடு மோசமாக உள்ளது. தெற்கு ரோட்டை இணைக்கும் இடத்தில் கழிவுநீர் வாய்க்கால் உள்ளது.
அதன் மேல் கட்டப்பட்ட கான்கிரீட் கம்பி பெயர்ந்து கால்வாயும் உடைந்து சேதமடைந்து செடிகள் முளைத்து வருகிறது. சாக்கடை நீர் ஓட முடியாமல் ரோட்டிலேயே நிற்கிறது. கடைகளை ஒட்டிய பகுதி மட்டுமின்றி இந்த வழியாகத்தான் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டும்.நகராட்சி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதியை பார்வையிட்டு சீரமைக்க வேண்டும்.

