/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மாசி தெப்பத்தன்று திருக்கோஷ்டியூரில் நடை அடைப்பு
/
மாசி தெப்பத்தன்று திருக்கோஷ்டியூரில் நடை அடைப்பு
மாசி தெப்பத்தன்று திருக்கோஷ்டியூரில் நடை அடைப்பு
மாசி தெப்பத்தன்று திருக்கோஷ்டியூரில் நடை அடைப்பு
ADDED : நவ 26, 2025 01:04 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் சவுமிய நாராயண பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் மாசி தெப்ப உற்ஸவ விழா 10 நாட்கள் நடக்கும்.
2026 ம் ஆண்டிற்கான மாசி தெப்ப உற்சவம் பிப்.22 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். முக்கிய நிகழ்வாக மார்ச் 3 மாசி தெப்ப உற்ஸவம் நடக்கும். அன்று சந்திரகிரகணமாக இருப்பதால் மதியம் 1:00 முதல் இரவு 8:00 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும். அந்த நேரத்தில் தெப்பம் நடைபெறும் இடத்தில் உற்ஸவர் தரிசனமும் மூடப்படும். பக்தர்கள் அதற்கேற்ப தங்களது வருகையை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு சிவகங்கை தேவஸ்தான மேலாளர் இளங்கோ தெரிவித்தார்.