ADDED : செப் 27, 2024 06:43 AM
திருப்புத்துார்: சேவினிப்பட்டி வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் வயல் விழா குறித்து விவசாயிகள் பயிற்சிக் கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் சேவற்கொடியோன் முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) சண்முகஜெயந்தி விவசாயிகள் கௌரவ நிதி உதவி திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரத்தை துவக்கி வேளாண் திட்டங்கள் குறித்து விளக்கினார். உதவி இயக்குனர் செந்தில்நாதன் வேளாண் விரிவாக்க மையத்தில் இடுபொருள் வாங்க டிஜிடல் பண பரிவர்த்தனையை பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.
தோட்டக்கலை அலுவலர் லோகேஷ், வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் விமலேந்திரன், உதவி வேளாண் அலுவலர்கள் பேசினர். ஏற்பாட்டினை தொழில்நுட்ப மேலாளர் சுதர்சன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகப்பாண்டி, கோபாலகிருஷ்ணன் செய்தனர்.