/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
எஸ்.ஐ., தேர்வுக்கு பயிற்சி வகுப்பு
/
எஸ்.ஐ., தேர்வுக்கு பயிற்சி வகுப்பு
ADDED : ஏப் 24, 2025 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் எஸ்.ஐ., பதவிக்கான தேர்வு எழுத உள்ளோருக்கு சிவகங்கையில் இலவச பயிற்சி நாளை துவங்குகிறது.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இப்பயிற்சி வகுப்பு இலவசமாக நாளை (ஏப்., 25) முதல் துவங்குகிறது.தினமும் காலை 10:30 முதல் மதியம் 1:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படும். இம்மாவட்டத்தை சேர்ந்த வேலை தேடுவோர் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம் என வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்தார்.