ADDED : பிப் 11, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை தீயணைப்பு நிலையத்தில் தனியார் துறை பாதுகாப்பு காவலாளிகளுக்கு தீயணைப்பு அடிப்படை பயிற்சி மற்றும் தீ விபத்து ஏற்பட்டால் தீ பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தி தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
உதவி மாவட்ட அலுவலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். நிலைய அலுவலர் நாகநாதன், சிறப்பு நிலைய அலுவலர் அண்ணாமலை முன்னிலை வகித்தனர். சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் செல்வக்குமார், மேலாளர் நித்தின் தீபக் மேற்பார்வையில் மருத்துக்கல்லுாரி மருத்துவமனை காவலாளிகள், ஈ.ஐ.டி., பாரி கம்பெனி பாதுகாப்பு காவலாளிகள் பயிற்சி பெற்றனர்.
