/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
என்.எஸ்.எஸ்., அலுவலர்களுக்கு பயிற்சி
/
என்.எஸ்.எஸ்., அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : பிப் 24, 2024 04:58 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப் பள்ளி கலையரங்கத்தில் நடந்தது.
பயிற்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் உதவித்திட்ட அலுவலர் பீட்டர் லெமாயு முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களான ராஜா துரைசிங்கம் கல்லுாரி பேராசிரியர் சிவா, சேவுகன் அண்ணாமலைக் கல்லுாரி பேராசிரியர் மூர்த்தி ஒருங்கிணைத்தனர். சிவகங்கை மாவட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலிருந்து 19 நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் 12 ஒருங்கிணைந்த பள்ளி கல்வி ஆசிரியர் பயிற்றுநர்கள் பயிற்சி பெற்றனர்.
ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெஸிமாபேகம் செய்திருந்தார்.