ADDED : ஜன 30, 2026 05:44 AM
அ நிறம் | அளவு
எஸ்.புதுார்: எஸ்.புதுார் வட்டார வள மையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது. இதில் 107 தொடக்கநிலை ஆசிரியர்கள் பங்கேற்றனர். இப்பயிற்சியில் மூன்றாம் பருவத்திற்கான படைப்பு திறன், கற்றல் விளைவுகள் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் கலைச்செல்வி தலைமை வகித்தார்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் வனிதாமலர், முகமது ஆசாத், ஜெயலட்சுமி, அப்சரா பானு, கட்டையன்பட்டி தலைமையாசிரியர் பர்வதம் பயிற்சியளித்தனர்.
