ADDED : மார் 20, 2024 12:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை மருதுபாண்டியர் நகர் பள்ளி அரங்கில் ஓட்டுச்சாவடி மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.
கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். சிவகங்கை கோட்டாட்சியர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். சிவகங்கை தாசில்தார் சிவராமன் வரவேற்றார்.
சிவகங்கை சட்டசபை தொகுதிக்குட்பட்ட ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றக்கூடிய மண்டல அலுவலர்களுக்கு, ஓட்டுச்சாவடிகளை எப்படி கண்காணிப்பது, ஓட்டுப்பதிவு நாளான்று செய்யவேண்டிய பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்தல், ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், ஓட்டு உறுதி தன்மை இயந்திரங்களின் செயல்பாடு குறித்து தாசில்தார் தமிழரசன், மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

