/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கட்டிக் குளத்தில் டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு
/
கட்டிக் குளத்தில் டிரான்ஸ்பார்மர் சீரமைப்பு
ADDED : பிப் 14, 2025 07:16 AM
மானாமதுரை: தினமலர் செய்தி எதிரொலியாக மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் 2 வருடங்களாக பழுதடைந்திருந்த டிரான்ஸ்பார்மர் சீரமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
கட்டிக்குளத்தில் முனியாண்டிபுரம், சமயபுரம் பகுதிகளில் 150 க்கு மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு பழுதடைந்ததால் போதிய மின்சாரம் இல்லாமல் மின்சாதன பொருட்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருவது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனைத் தொடர்ந்து ராஜகம்பீரம் மின்வாரியத்தினர் நேற்று பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.