/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
/
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்
ADDED : ஜன 23, 2025 04:17 AM

காரைக்குடி: காரைக்குடியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
15வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்கவும், ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி வழங்கவும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கவும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடந்தது. காரைக்குடியில் அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி.ஐ.டி.யு., மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் சார்பில் காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
மண்டல பொதுச்செயலாளர் தெய்வீர பாண்டியன், சம்மேளன நிர்வாகி சிவக்குமார் சி.ஐ.டி.யு., மாவட்ட நிர்வாகி அழகர்சாமி முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் துவக்கி வைத்தார்.