ADDED : செப் 19, 2025 02:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் அருகே கீழக்கோட்டை அரசு நடுநிலை பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை தெய்வானை தலைமை வகித்தார். ஆசிரியை மீனாட்சி முன்னிலை வகித்தார். ஆசிரியை கீதா வரவேற்றார். செம்பனுார் அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியை மங்கையற்கரசி சிறப்பு வகித்தார். சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியசாமி பசுமை உறுதி மொழி வாசித்தார். ஆசிரியை கமலம்பாய் நன்றி கூறினார்.