/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கவிஞர் கண்ணதாசன் நினைவு கவிதாஞ்சலி
/
கவிஞர் கண்ணதாசன் நினைவு கவிதாஞ்சலி
ADDED : அக் 18, 2025 03:58 AM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி பாரம் பரிய அருங்காட்சி யகத்தில் கண்ணதாசன் நினைவு பேச்சரங்கம், கவிதாஞ்சலி நடந்தது.
எழுத்தாளர் கூட்டமைப்பு தலைவர் எஸ்.எல்.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தார். காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லுாரி முதல்வர் சையது, பேராசிரியர் சந்திரமோகன், மெய்யாண்டவர், பேராசிரியர் சுப்பிரமணியன், ஆதரவற்றோர் பெண்கள் நல வாரிய குழு உறுப்பினர் ரேவதி அழகர்சாமி, திருப்புத்துார் நல் நுாலகர் ஜெயகாந்தன், திருவாடானை நுாலகர் விஜயா, சக்கந்தி வேலுச்சாமி, கவிஞர்கள் இதயத்துல்லா, சரவணபாண்டியன்,சுரேஷ்காந்த், பன்னீர்செல்வம், நேதாஜி மக்கள் இயக்கம் மாவட்ட அமைப்பாளர் பிரபாகர், ஆசிரியர் ரத்தினம் பங்கேற்றனர்.
கவிதா மண்டல நிறுவனர் மதுரை பொற்கை பாண்டியன் கண்ணதாசன் என்னும் கவிதை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.பாரதி இலக்கியக் கழக தலைவர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார். முன்னதாக கண்ண தாசனின் சொந்த ஊரான சிறுகூடல்பட்டியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.