ADDED : மே 17, 2025 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துார் குளங்கரை காத்த கூத்த அய்யனார் கோயில் காளை இறந்ததை அடுத்து அப்பகுதியினர் காளையின் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இக்கோயில் காளை 'மருது' என்ற பெயரால் அழைக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு விஜயன் என்பவரால் வழங்கப்பட்டது. இப்பகுதியில் நடைபெற்ற பல மஞ்சுவிரட்டுக்களில் பங்கேற்றது.
அண்மை காலமாக வயது முதிர்வினால் மஞ்சுவிரட்டுக்கு செல்லாமல் தெருக்களில் உலா வந்தது.
இந்நிலையில் நேற்று காளை உயிரிழந்தது. இறந்த காளையின் உடலுக்கு அப்பகுதியினர்,மாடு பிடி வீரர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.