ADDED : ஜன 12, 2026 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: காளையார்கோவில் தெற்கு தெருவில் ஒழுகுளம் கண்மாய் கரையில் கிராம ஊராட்சி சார்பில் குவித்து வைத்துள்ள குப்பைகளை அகற்றக்கோரி த.வெ.க.,வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தெற்கு ஒன்றிய செயலாளர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் சஞ்சீவ்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துபாரதி, இணை செயலாளர் காளீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காளையார்கோவில் ஒன்றிய செயலாளர்கள் (தெற்கு) சத்தியமூர்த்தி, (வடக்கு) மதன், (கிழக்கு) சுனில்குமார், (மேற்கு) ஆரோக்கியராஜா, சுந்தரம், செந்துார், கவுரி உட்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

