/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் ரோட்டில் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளால் அவதி
/
திருப்புவனம் ரோட்டில் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளால் அவதி
திருப்புவனம் ரோட்டில் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளால் அவதி
திருப்புவனம் ரோட்டில் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளால் அவதி
ADDED : மார் 31, 2025 06:14 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலையில் ரோட்டோரம் கொட்டப்படும் செப்டிக் டேங்க் கழிவுகளால் சுகாதார கேடு நிலவி வருவதுடன் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனத்தில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். சேதுபதி நகர், பசும்பொன்நகர், பாக்யா நகர், இந்திரா நகர் என பல்வேறு குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த எட்டாரயித்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பெரும்பாலான வீடுகளில் செப்டிக் டேங்க் நிரம்பிய உடன் தனியார் செப்டிக் டேங்க் ஆபரேட்டர்கள் அவற்றை சுத்தம் செய்து கழிவுகள் அனைத்தையும் நான்கு வழிச்சாலையை ஒட்டி பேரூராட்சி குப்பை கொட்டும் இடங்களில் கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.
பைபாஸ் ரோட்டை ஒட்டிய சுரங்கப்பாதை, தட்டான்குளம், செல்லப்பனேந்தலை ஒட்டிய வைகை ஆறு, நான்கு வழிச்சாலையை ஒட்டி உள்ள வலையனேந்தல் கண்மாய் ஆகிய பகுதிகளில் பட்டப்பகலில் தினசரி 10 ஆயிரம் லிட்டர் கழிவுகளை கொட்டி மாசுபடுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே குப்பைகளால் துர்நாற்றம் நிலவி வரும் நிலையில் செப்டிக் டேங்க் கழிவுகளையும் டேங்கர் லாரிகளில் கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
தற்போது கோடை வெயில் காலம் என்பதால் பலரும் வீடுகளில் உள்ள செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இதனால் தனியார் செப்டிக் டேங்க் கிளீனிங் ஆப்பரேட்டர்கள் கழிவுகளை நகரை விட்டு தள்ளி சென்று கொட்டாமல் நகரை ஒட்டியுள்ள பகுதிகளிலேயே கொட்டி வருகின்றனர். நான்கு வழிச்சாலையை ஒட்டியே லட்சக்கணக்கான லிட்டர் கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் நிலவுகிறது.