UPDATED : நவ 24, 2026 04:50 PM
ADDED : நவ 24, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கையில் வேலுநாச்சியார் அறக்கட்டளை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைவர் கோபால்துரை தலைமை வகித்தார். பொருளாளர் சுப்பிரமணியராஜா வரவேற்றார். செயலாளர் மணிமுத்து முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., குழந்தை ராணி நாச்சியார் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் ஜன.3ல் வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ள நிலையில் அந்த விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொள்ள வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. செயற்குழு உறுப்பினர்கள் தர்மராஜா, வெங்கடேஷ்துரை கலந்து கொண்டனர். துணைத்தலைவர் அதிபதிராஜா நன்றி கூறினார்.
