ADDED : டிச 08, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆஷா அஜித் காசநோய் விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார்.
காசநோய் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் ஏற்கப்பட்டது. துணை இயக்குநர் வெள்ளைச்சாமி, மாவட்ட சுகாதார அலுவலர் மீனாட்சி, மருத்துவக் கல்லுாரி நிலைய மருத்துவர் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.