நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உலக காசநோய் தின அனுசரிப்பு நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது: 4 ஆண்டில் 15,295 பேருக்கு சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 6,298 பேருக்கு காச நோய் அறிகுறி கண்டறியப்பட்டது. அவர்களில் 5,942 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு மாதம் ரூ.1,000 வீதம் 6,278 பேர் பெற்றுள்ளனர், என்றார்.
சிறப்பான சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு சான்று வழங்கப்பட்டது. இணை இயக்குனர் (மருத்துவம்) தர்மர், துணை இயக்குனர்கள் வெள்ளைச்சாமி (காசநோய்), கவிதாராணி (தொழுநோய்), சுகாதார அலுவலர் மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

