/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
வீட்டில் தீப்பிடித்ததில் கருகிய டிவி
/
வீட்டில் தீப்பிடித்ததில் கருகிய டிவி
ADDED : ஜூலை 26, 2025 03:45 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெற்குப்பை: ஒழுகமங்கலத்தில் சிட்டு என்பவரின் வீட்டில் நேற்று காலை 8:30 மணிக்கு புகை வந்துள்ளது. சிட்டு அருகிலிருந்த தென்னந்தோப்பில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார்.
புகையைப் பார்த்து வீட்டின் உள்ளே சென்ற போது சுவரில் பொருத்தியிருந்த எல்.இ.டி.டிவி எரிந்து கீழே விழுந்தது. அருகிலிருந்த சோபா, துணிகளும் எரிந்தன. அவரது வீட்டின் அருகிலேயே டிரான்ஸ்பார்மர் உள்ளது. டிவியில் தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மின் கசிவால், அல்லது உயர் மின் அழுத்தம் காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. நெற்குப்பை போலீசார் விசாரிக்கின்றனர்.