UPDATED : ஏப் 28, 2026 05:47 PM
ADDED : ஏப் 28, 2026 05:41 PM
திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர் குணசேகரன். இவர் ஏப்.26 அன்று இரவு திருக்கோஷ்டியூர் பகுதியில் ரோந்து சென்றார். அப்போது கண்டரமாணிக்கம் மாணிக்கநாச்சி அம்மன் கோவில் 6ஆம் திருவிழாவில் சுவாமி ஊர்வலத்தின் போது 3 பேர் போதையில் பிரச்னை செய்வது தெரியவந்தது. குணசேகரன் அங்கு சென்றார். பிரச்னையில் ஈடுபட்டவர்களிடம் போலீஸ் ஸ்டேஷன் வாங்க, அங்கு பேசிக்கொள்ளலாம் என்றார். அதற்கு கண்டரமாணிக்கத்தை சேர்ந்த தவசுப்பாண்டி 33 தம்பி இறந்து கிடக்கிறார்.
உங்களுக்கு இங்கு திருவிழா முக்கியமா என்று எஸ்.ஐ.,யிடம் அசிங்கமாக பேசியுள்ளார். திருப்புத்துார் இந்திரா நகரை சேர்ந்த செல்வக்குமாரும் 27, முனீஸ்வரனும் எஸ்.ஐ., பிடித்துக்கொண்டனர். தவசுப்பாண்டி எஸ்.ஐ.,யை முகத்தில் தாக்கியுள்ளார். இதில் எஸ்.ஐ.,க்கு இடது கண்ணில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் விலக்கிவிட்டனர். அவர்கள் 3 பேரும் எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். எஸ்.ஐ., குணசேகரன் புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிந்து தவசுப்பாண்டி, செல்வக்குமாரை கைது செய்தனர். முனீஸ்வரனை தேடி வருகின்றனர்.
