/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பச்சிளம் குழந்தை கழுத்தறுப்பு இருவர் கைது
/
பச்சிளம் குழந்தை கழுத்தறுப்பு இருவர் கைது
ADDED : அக் 24, 2024 02:12 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்தவர் மகேந்திரன், 45. இவர் அப்பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமியை, கர்ப்பமாக்கினார்.
சிறுமி 18 வயதை கடந்த நிலையில், அவருக்கு அக்., 22ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. அப்பெண் யாருக்கும் தெரியாமல், தனக்குத் தானே பிரசவம் பார்த்தார். பின், குழந்தையை என்ன செய்வதென்று தெரியாமல், குழந்தையின் கை, கழுத்தை கத்தியால் அறுத்து, மகேந்திரன் வீட்டின் முன் போட்டார்.
குழந்தை மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தையை வீசிச் சென்றது தாய் தான் என்றும், அதற்கு காரணமானவர் மகேந்திரன் என்பதும் தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

