UPDATED : ஆக 01, 2026 04:20 PM
ADDED : ஆக 01, 2026 04:11 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:சிவகங்கை அருகே கீழவாணியங்குடியை சேர்ந்தவர் இந்திரா 44.
இவருக்கு சொந்தமாக வாணியங்குடி பஸ் ஸ்டாண்ட் அருகே ஓட்டு வீடு உள்ளது. இந்த ஓட்டு வீட்டை கடந்த 31ல் இரண்டு டூவீலரில் வந்தவர்கள் ஓடுகளை உடைத்து சேதப்படுத்தினர். இந்திரா போலீசில் புகார் அளித்தார். போலீசார் இதில் தொடர்புடைய மாத்துாரை சேர்ந்த தினேஷ் 24, செங்கல்பட்டு மாவட்டம் திம்மவனம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் 19 இருவரை கைது செய்து மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.
