ADDED : ஜூலை 03, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,: கண்ணங்குடி ஒன்றியம் கொடிக்குளத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பனை மரத்து கள்ளை சட்ட விரோதமாக இறக்குவதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தாலுகா எஸ்.ஐ., சையது அஸ்லாம் சம்பந்தப்பட்ட பகுதியை ஆய்வு செய்ததில் அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம். 57., கிளாமலை சரவணன் இருவரும் கள் இறக்கிக் கொண்டு இருப்பதை பார்த்தார். இதனைத் தொடர்ந்து எஸ் ஐ. சைமது அஸ்லாம் கள் இறக்கிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.