ADDED : ஜூன் 06, 2026 11:19 PM

கீழச்சிவல்பட்டி: சிவகங்கை மாவட்டம் கீழக்காவினிப்பட்டி கண்மாயில் போதை நண்பர்களால் பத்தாம் வகுப்பு மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்புத்துார் ஒன்றியம் காரையூரைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் ஜூன் 4ம் தேதி பள்ளிக்கு செல்லாமல், 4 பேருடன் காரையூரில் மது அருந்தினார். அவர் கீழக்காவினிப்பட்டி கண்மாயில் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக மாணவனுடன் சென்ற 17 வயது நண்பர் போலீசாரிடம் தெரிவித்தார்.
கொலை நடந்த இடத்திற்கு சென்று உடலை மீட்ட போலீசார், விசாரணை நடத்தி கொலைக்கு பின் தலைமறைவான இருவரை தேடினர்.
நேற்று இருவரும் போலீசாரிடம் சிக்கினர். பிடிபட்ட கணேசன் 22, 12ம் வகுப்பு படித்துவிட்டு வேலை இல்லாமல் உள்ளார். அரவிந்த் 25, ஜல்லிக்கட்டு காளை விற்பனை, சாமி குறிபார்க்கும் வேலை செய்தார். கொலைக்கான காரணம் குறித்து இருவரிடமும் போலீசார் விசாரிக்கின்றனர்.
