ஆசிரியர் கடத்தல் வழக்கில் இருவர் கைது: கார் பறிமுதல்
ஆசிரியர் கடத்தல் வழக்கில் இருவர் கைது: கார் பறிமுதல்
ADDED : மார் 10, 2026 04:58 AM
தேவகோட்டை: தேவகோட்டை ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்செழியன்.57, இவரது மனைவி சாந்தி மெர்சி கிரேஸ்.48, இருவரும் ஆண்டாவூரணி தனியார் பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகின்றனர். இரு தினங்களுக்கு முன் மதியம் இருவரும் பணிக்கு காரில் சென்ற போது நான்கு பேர் காரை மறித்து கார் கண்ணாடியை உடைத்து ஆசிரியர் தம்பதியரை தாக்கி, காரை ஓட்டி சென்ற மற்றொரு ஆசிரியரையும் தாக்கினர். அருள் செழியனை மிரட்டி மற்றொரு காரில் கடத்தி பணம் கேட்டு மிரட்டினர்.
இது தொடர்பாக மனைவி தாலுகா போலீசில் புகார் செய்ததை தொடர்ந்து போலீசார் தேடுவதை அறிந்த கும்பல் மதுரை அருகே பஸ் ஸ்டாண்டில் அருள் செழியனை இறக்கி விட்டு சென்று விட்டனர்.
அருள் செழியன் தேவகோட்டை வந்து போலீசாரிடம் விபரங்களை கூறியதில் கும்பலில் இருவர் அருள்செழியன் வசிக்கும் ராம்நகர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா. 33, மற்றொருவர் கோவிந்தராஜன். 36, என தெரிய வந்தது. நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் என தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இருவரையும் தாலுகா போலீசார் கைது செய்தனர்.
