ADDED : மே 10, 2026 02:36 AM
சிவகங்கை: தட்டான்குளத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில் போலீசார் இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே தட்டான்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் விவேக் 23. மதுரை தனியார் நிதி நிறுவனத்தில் வசூல் கணக்காளராக பணிபுரிந்தார். இவரது டூவீலரை மே 4ல் வீட்டின் அருகே நிறுத்தியிருந்தார். டூவீலரை மாரநாட்டைச் சேர்ந்த முத்துராமு 22 உள்ளிட்ட 3 பேர் திருட முயன்றனர். இதை பார்த்த விவேக் மற்றும் உறவினர்கள் முத்துராமுவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இருவர் தப்பினர். போலீசார் முத்துராமுவை கைது செய்தனர்.
மே 7 இரவு தட்டான்குளம் வைகை ஆறு பாலத்தில் விவேக் , நண்பர்கள் நவீன் 22, மயில்ராஜ் 22, ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். 2 டூவீலர்களில் வந்த 4 பேர் விவேக்கை வெட்டிக் கொலை செய்தனர். அதை தடுக்க முயன்ற மயில்ராஜ் , நவீன் காயமடைந்தனர். திருப்புவனம் போலீசார் விசாரிக்கையில் டூவீலர் வாகன திருட்டில் ஈடுபட்டவரை போலீசாரிடம் பிடித்துக் கொடுத்ததால் கொலை நடந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக மாரநாடு ஜெயராம் மகன் அழகுசுந்தரம் 20, காளையார்கோவில் குமார் மகன் சந்துரு 24 , ஆகிய இருவரை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடிவருகின்றனர்.
