/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிங்கம்புணரி அருகே இருவர் தற்கொலை
/
சிங்கம்புணரி அருகே இருவர் தற்கொலை
ADDED : டிச 17, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே வெவ்வேறு சம்பவங்களில் இருவர் தற்கொலை செய்து கொண்டனர்.
காளாப்பூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜோதி மகன் ரமணன் 44. மளிகை கடை நடத்தி வருகிறார். குடும்பத்தகராறு காரணமாக டிச.15ம் தேதி இரவு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருப்புத்துார் அருகே ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னழகு மகன் செல்வம் 39. வெளிநாடு வேலைக்கு சென்று உடல்நலம் சரியில்லாமல் திரும்பி வீட்டில் இருந்து வந்தார். இவரும் குடும்ப பிரச்னை காரணமாக தனது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இருவேறு சம்பவங்கள் குறித்த புகார்களில் சதுர்வேதமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

