நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கொல்லங்குடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செய்யது இப்ராஹிம் 45. இவர் சிவகங்கை ரோட்டில் நடைபயிற்சி சென்றார்.
கீரனுார் கண்மாய் பகுதியில் சென்றபோது எதிரே டூவீலரில் வந்த காளையார்கோவில் காளிமுத்து தெரு ராஜேஷ் 25, காளையார்கோவில் அருகே உழவூரனி கிராமத்தை சேர்ந்த நிதீஷ் குமார் 21 இருவரும் வாளை காட்டி மிரட்டி செய்யது இப்ராஹிம் சட்டைபையில் இருந்த ரூ.650 மற்றும் அலைபேசியை பறித்து சென்றனர்.
செய்யது இப்ராஹிம் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சரவணபோஸ் தலைமையிலான போலீசார் ராஜேஷ் மற்றும் நிதீஷ்குமாரை கைது செய்தனர்.

