UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 05:35 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்: திருப்புத்தூர் ஒன்றியம் மாங்குடி அருகில் சிங்கம்புணரி ரோட்டில் டூ வீலர்கள் மோதலில் பாத்திரம் விற்கும் முதியவர் இறந்தார்.
மாங்குடியைச் சேர்ந்த குமரப்பன் மகன் கதிரேசன்65. இவர் பாத்திரம் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று காலை 7:00 மணி அளவில் மாங்குடியில் இருந்து காரையூருக்கு டூ வீலரில் கதிரேசன் சென்றார்.(ஹெல்மெட் அணியவில்லை) அப்போது சிங்கம்புணரியிலிருந்து வந்த தேவகோட்டை அஜ்மீர், அவரது நண்பர் ஜீவாப்ரியன் ஆகியோர்(ஹெல்மெட் அணிந்திருந்தனர்) வந்த டூவீலர் பின்புறமாக மோதியது. அதில் கதிரேசன் டூ வீலரிலிருந்து தூக்கியெறியப்பட்டு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். மற்ற இருவரும் காயத்துடன் தப்பினர். கண்டவராயன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
