ADDED : மார் 11, 2026 04:39 AM
அ நிறம் | அளவு
சிவகங்கை: மதகுபட்டி அருகே புத்தடிபட்டியை சேர்ந்தவர் ராமு 35. இவருக்கு ஒரு வயது மகன் உள்ளார். இவர் நேற்று முன்தினம் மாலை 5:30 மணிக்கு வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தார்.
அந்த வழியாக டூவீலரில் சென்றவர் சிறுவன் மீது மோதினார். இதில் சிறுவனுக்கு தலை மற்றும் வலது காலில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். ராமு புகாரின் பேரில் டூவீலர் ஓட்டிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
