ADDED : ஆக 25, 2026 07:03 PM
அ நிறம் | அளவு
திருப்புத்துார்,ஆக.26-
திருப்புத்துார் பெரியகடை வீதி ஏ.வேலங்குடியைச் சேர்ந்த முகமது அப்துல்லா கடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூ வீலர் ஆக.,4ல் திருடு போனது. திருப்புத்தூர் போலீசில் புகார் செய்தனர். எஸ்.ஐ.,ஹரிகிருஷ்ணன், எஸ்.எஸ்.ஐ.,வேல்முருகன் உள்ளிட்ட போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில் காரைக்குடி வேலங்குடியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பாண்டி (எ) செந்தமிழ்பாண்டி35 மற்றும் பூபதி டூ வீலரை திருடியது தெரியவந்தது.
இருவரையும் தேடிய போலீசார் விழுப்புரம் அருகில் செந்தமிழ்பாண்டியன் சிக்கினார். அவரைக் கைது, அவரிடமிருந்து 2 டூ வீலர்களை போலீசார் கைப்பற்றினர். மேலும் நாமக்கல்லை சேர்ந்த பூபதியை தேடி வருகின்றனர். விசாரணையில், செந்தமிழ்பாண்டி 11 டூ வீலர்களை திருடியதும், தெரிய வந்தது.
