/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கோட்டைபோலீஸ் ஸ்டேஷனில் புதைந்து வரும் இருசக்கர வாகனங்கள்
/
சாக்கோட்டைபோலீஸ் ஸ்டேஷனில் புதைந்து வரும் இருசக்கர வாகனங்கள்
சாக்கோட்டைபோலீஸ் ஸ்டேஷனில் புதைந்து வரும் இருசக்கர வாகனங்கள்
சாக்கோட்டைபோலீஸ் ஸ்டேஷனில் புதைந்து வரும் இருசக்கர வாகனங்கள்
ADDED : ஆக 21, 2025 11:17 PM

காரைக்குடி: சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள வாகனங்கள் புதைந்து வீணாகி வருகிறது.
சாக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள், லாரிகள் போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக மழையிலும் வெயிலிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் துருப்பிடித்து வீணாகி வருகிறது. எதற்கும் பயன்படாமல் துருப்பிடித்து அழிந்து வரும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரியவர்களிடம் ஒப்படைக்கவோ அல்லது ஏலம் விடவோ சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.