/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விஷவாயு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் பலி
/
விஷவாயு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் பலி
ADDED : செப் 22, 2024 01:44 AM

இளையான்குடி:சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே பிஸ்மில்லா நகரில், அப்பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர் புதிய வீடு கட்டி வருகிறார். இதற்கு அருகில், மூன்று நாட்களாக, நான்கு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டி அமைக்க குழி தோண்டினர். நேற்று மதியம், 1:00 மணிக்கு, 25 அடிக்கு மேல் தோண்டியுள்ளனர்.
சீத்துாரணி கிராமத்தைச் சேர்ந்த ராமையா, 56, திருவுடையார்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன், 56, ஆகியோர் மேலும் தோண்டுவதற்காக குழியில் இறங்கினர்.
நீண்ட நேரமாகியும் மேலே வராததாலும், எந்த சத்தமும் இல்லாததால், மேலே இருந்த மற்ற இரு தொழிலாளர்கள் சந்தேகமடைந்து, தீயணைப்பு துறையினருக்கு தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் குழிக்குள் இறங்க முயற்சித்தபோது, விஷவாயு பரவி இருப்பதை அறிந்தனர். பின், குழியில் மயங்கிக் கிடந்த இருவரையும் கயிறு கட்டி மீட்டனர். இளையான்குடி அரசு மருத்துவமனையில் அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இளையான்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.