/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
டூவீலரில் வாகனம் மோதி வாலிபர்கள் இருவர் பலி
/
டூவீலரில் வாகனம் மோதி வாலிபர்கள் இருவர் பலி
ADDED : அக் 18, 2025 12:44 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், டூவீலரில் வந்த வாலிபர்கள் இருவர் பலியாயினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர்கள் கருப்பையா மகன் பரத்குமார் 21.கார்த்திக் மகன் சிவசங்கர் 20. சேக்கப் மகன் டேவிட் 19. இவர்கள் சிங்கம்புணரியில் பட்டாசு கடையில் வேலை பார்த்தனர்.
நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மூவரும் பணி முடித்து டூவீலரில் திருப்புத்துாருக்கு திரும்பிய போது, காளாப்பூர் பெரிய பாலம் அருகே உள்ள வளைவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பரத்குமார், சிவசங்கர் பலியாயினர்.
காயமடைந்த டேவிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோதிவிட்டு சென்ற வாகனத்தையும், டிரைவரையும் சிங்கம்புணரி போலீசார் தேடுகின்றனர்.