/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல்
/
கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் உடல்
ADDED : ஜூலை 25, 2025 12:11 AM
கீழடி; திருப்புவனம் அருகே முக்குடி கிராமத்திலுள்ள கிணற்றில் நேற்று முன்தினம் மாலை அடையாளம் தெரியாத ஆண் உடல் மிதப்பதாக வி.ஏ.ஒ., முரளிதரன் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார்.
நேற்று மாலை திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தடயவியல் நிபுணர் சிவகுரு முன்னிலையில் மதுரை அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரர்கள் கிணற்றில் இருந்து சிதைந்த உடல் பாகங்களை மீட்டனர்.
உயிரிழந்து பல நாட்கள் இருக்கும். உடல் பாகங்கள் முழுமையாக எதுவும் கிடைக்கவில்லை. சட்டை இன் செய்த நிலையில் கருப்பு பேண்ட் முழுமையாக உள்ளது. எப்படி இறந்தார், வயது என்ன என எதுவும் தெரியவில்லை. போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் சமீபத்தில் காணாமல் போனவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர்.